இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் சிறையில் இருந்தவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் ஓய்வூதியம் மகராஷ்டிரா அரசு முடிவு

வியாழக்கிழமை, 14 ஜூன் 2018      இந்தியா
jail 2018 08 02

மும்பை: இந்தியாவில் நெருக்கடி அமலில் இருந்த காலங்களில் சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாதந்தோறும் இனி ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் அளிப்பதென மகராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது, ஒரு மாதத்திற்கும் குறைவாக சிறைவாசம் அனுபவித்தவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க அமைச்சரவையின் துணைக்குழு முடிவு செய்துள்ளது. 1975 முதல் 1977 வரை 21 மாதங்கள் அமலில் இருந்த நெருக்கடி நிலை காலத்தில் ஜனநாயகம் திரும்புவதற்காக போராட்டக் களத்தில் இறங்கியவர்களை கவுரவிக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்திற்காக இந்த ஓய்வூதியம் வழங்கிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் உணவு மற்றும் சிவில் சப்ளை அமைச்சர் கிரீஷ் பபாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒரு மாதத்திற்கும் மேல் சிறையில் பணியாற்றிய கைம்பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் ஒரு மாதத்திற்கும் குறைவாக சிறையில் பணியாற்றிய கைம்பெண்களுக்கு ரூ. 2500 வழங்கவும் முடிவு எடுக்கப்பட்டது. அரசு இந்த ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதிகள் குறித்து சில நிபந்தனைகளையும் இது தொடர்பான மேலும் சில முடிவுகளையும் விரைவில் அறிவிக்க உள்ளது என்று தெரிவித்தார்.


இந்த வார ராசிபலன் - 17.06.2018 முதல் 23.06.2018 வரை | Weekly Tamil Horoscope from 17.06.2018 to 23.06.2018

Kashmiri Capscicum Chicken Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து