முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை கெஜ்ரிவாலுடன் இணைந்து பணியாற்ற சொல்லுங்கள் - பிரதமர் மோடிக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் டுவீட்

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

மும்பை : உங்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லி முதல்வருடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள் என்று கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் பிரகாஷ்ராஜ், பிரதமர் மோடியை டுவிட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

டெல்லியில் கடந்த 7 நாட்களாக முதல்வர் கெஜ்ரிவால், அமைச்சர்கள் மணீஷ் ஷிசோடியா, கோபால் ராய், சத்யேந்திர ஜெயின் ஆகியோர் துணை நிலை ஆளுநர் இல்லத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி முதல்வரின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் கிண்டலுடன் கூடிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதில், நாட்டின் மிக உயர்ந்த தலைவரே. நீங்கள் உடற்தகுதி சவாலிலும், யோகா, உடற்பயிற்சி செய்வதிலும் மிகவும் பரபரப்பாக இருப்பீர்கள் என்று எங்களுக்குத் தெரியும். எங்களுக்காக ஒரு நிமிடம் ஒதுக்குங்கள், ஆழ்ந்து மூச்சு இழுத்து விட்டுக் கொள்ளுங்கள். உங்களைச் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லி முதல்வருடன் இணைந்து பணியாற்றக் கூறுங்கள். இதை படித்த பின் உங்களின் உடற்பயிற்சியையும், வேலையையும் கூட செய்யலாம் என்று பிரகாஷ்ராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து