முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தடையை மீறி புகைத்ததால் சர்ச்சையில் சிக்கினார் மாரடோனா

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

உலகக் கோப்பை போட்டியைக் காண வந்த ஜாம்பவான் மாரடோனா தடையை மீறி புகைத்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

அர்ஜென்டீனா அணியின் கால்பந்து ஜாம்பவான் மாரடோனா, ஸ்பார்டக் மைதானத்தில் ஐஸ்லாந்து-ஆர்ஜென்டீனா இடையே நடந்த போட்டியைக் காண வந்திருந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடக்கும் 12 மைதானங்களிலும் சிகரெட் பிடிப்பது, புகைத்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பார்வையாளர் மாடத்தில் இருந்த மாரடோனா தடையை மீறி புகைத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிபா நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. சர்ச்சைகளுக்கு பெயர் பெற்ற மாரடோனா, ஏற்கெனவே கடந்த 1986-ல் உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கையால் கோலை தள்ளிவிட்டார். பின்னர் அது குறித்து கேட்ட போது கடவுளின் கை அது எனக்கூறினார். மேலும் போதை மருந்து பழக்கம் தொடர்பாகவும் அவர் மீது புகார்கள் எழுந்தன. மேலும் ஆசிய ரசிகர் ஒருவரிடம் இனரீதியில் அவமானப்படுத்தும் வகையில் நடந்ததாக தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு பதிலளித்த மாரடோனா, ஆசிய ரசிகர் ஒருவர் ஆர்ஜென்டீனா அணி சீருடையை அணிந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்தேன். தற்போதைய சூழலில் எதையாவது செய்தியாக்க வேண்டும் என சிலர் தேடுகின்றனர் எனத் தெரிவித்தார். மேலும் தனது முகநூல் பக்கத்தில் புகைபிடித்ததற்காக வருத்தம் தெரிவித்து பதிவிட்டுள்ளார் மாரடோனா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து