முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளியே புலி போல காட்டிக்கொள்ளும் ஸ்டாலின் சட்டசபையில் எலியாக மாறிவிடுகிறார் - அமைச்சர் செல்லூர் ராஜூ கிண்டல்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சட்டமன்றத்தில் எலியாகவும், மக்கள் மன்றத்தில் புலியாக இருக்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கிண்டல் அடித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற கூட்டுறவுத்துறை ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

எந்த பாதகமும் நேராது

காவிரி ஆணையம் குறித்து மத்திய அமைச்சரவை தான் முடிவு செய்ய வேண்டும் என்ற கர்நாடக முதல்வர் குமாரசாமி தன்னுடைய பேச்சின் மூலம் அரசுக்கு எந்த வித பிரச்னையும் நேர்ந்து விடக்கூடாது என்று நினைத்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஏனென்றால் ஆறுகளை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது. உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பும் வழங்கி விட்டது. எனவே காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் கோரிக்கைக்கு எந்த பாதகமும் நேராது.

எந்த பாதிப்பும் இல்லை

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்றவர்கள் திரும்பி வந்து இணைந்தால் நல்லது என்பதில் முதல்வர் முடிவும் எங்களது முடிவும் ஒன்று தான். பசுமைவழிச்சாலை திட்டத்தின் மூலம் எந்த வித பாதிப்பும் இல்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திலேயே தெளிவுப்படுத்தி விட்டார். ஒரு சிலர் போராட்ட களத்தின் கதாநாயகனாக தங்களை கருதிக் கொண்டு 10,000 கோடி ரூபாய் செலவில் நடைபெறவுள்ள திட்டத்தை கெடுக்கும் நோக்கில் செயல்படுகிறார்கள், மக்களை திசை திருப்பும் நோக்கில் ஈடுபடுகிறார்கள். தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. அரசு கொண்டு வரும் திட்டத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அரசே அல்ல. ஆனால் வெளியில் தன்னை புலி போல் காட்டிக் கொள்ளும் எதிர்க்கட்சித்தலைவர் சட்டமன்றத்தில் எலியென மாறி விடுகிறார்.

அரசை அசைக்க முடியாது

உத்திரமேரூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், பசுமை வழிச்சாலை திட்டம் குறித்து முதல்வரின் ஒன்றரை மணிநேர விளக்கத்தை கேட்டு வரவேற்றார். ஆனால் வெளியே வந்து ஸ்டாலின் பேசும் பேச்சு, குறுக்கு வழியில் முதல்வர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் தான். எப்படி இருந்தாலும் ஸ்டாலின் முதல்வர் ஆக முடியாது. கருணாநிதியே பழைய கருணாநிதியாக எழுந்து வந்தால் கூட அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து