முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: ஜடேஜா, தவான், முரளி விஜய் முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்திர ஜடேஜா, ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

3-ம் இடத்தில்...

பெங்களூரில் கடந்தவாரம் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி இன்னிங்ஸ் 262 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ரவிந்திர ஜடேஜா டெஸ்ட் தரவரிசையில் பந்துவீச்சாளர் பட்டியலில் 866 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். பந்துவீச்சாளர்கள் வரிசையில், வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா 2 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தையும், உமேஷ் யாதவ் 2 இடங்கள் உயர்ந்து 26-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 811 புள்ளிகளுடன் அஸ்வின் 5-வது இடத்தில் உள்ளார்.

24-வது இடத்தில்...

தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் காகிசோ ரபாடா 897 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து வீர்ர ஜேம்ஸ் ஆன்டர்ஸன் 892 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். 4-ம் இடத்தில் பிலாண்டர் 845 புள்ளிகளுடன் உள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் ஷிகர் தவான், முரளி விஜய் ஆகியோர் 10 இடங்கள் முன்னேறியுள்ளனர். தவான் 24-வது இடத்துக்கும், முரளி விஜய் 23-வது இடத்துக்கும் உயர்ந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் உணவு இடைவேளைக்கு முன்பாக சதம் அடித்த முதல் இந்தியர் என்று ஷிகார் தவான் (107) சாதனை புரிந்தார். அதேபோல முரளி விஜய்(105) ரன்கள் சேர்த்தார். இதனால்,தரவரிசையில் இருவரும் முன்னேற்றம் கண்டனர்.

ஸ்டீவ் ஸ்மித் முதலிடம்

பேட்டிங்தரவரிசையில், 929 புள்ளிகளுடன் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்தில் இருந்து வருகிறார். 2-வது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 903 புள்ளிகளுடன் உள்ளார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்(855), கேன் வில்லியம்ஸன்(847), டேவிட் வார்னர்(820) ஆகியோர் முறையே 3முதல் 5-ம் இடங்களில் உள்ளனர். ஆப்கானிஸ்தான் வீரர்களும் தரவரிசைப் பட்டியலில் முதல் முறையாக இடம் பெற்றுள்ளனர். ஹஸ்மத்துல்லா 111வது இடத்திலும், அஸ்கர் ஸ்டானிஜய் 136-வது இடத்திலும் உள்ளனர்.

ரஷித் 2-வது இடத்தில்...

பந்துவீச்சாளர்களில் யாமின் அகமது(94), முஜிபுர் ரஹ்மான்(114), ரஷித் கான்(119) இடங்களிலும் உள்ளனர். ஒருநாள் போட்டியில் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ரஷித் கான் 2-வது இடத்திலும், டி20 போட்டியில் முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்தியதீவுகள் வேகப்பந்துவீச்சாளர் ஷாணன் கேப்ரியல் 11 இடங்கள் முன்னேறி 12-ம் இடத்துக்கு உயர்ந்துள்ளார். இது அவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் தரவரிசையில் மிகச்சிறந்த இடமாகும

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து