முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆம்புலன்ஸ் சேவைக்கு நிதியுதவி பிரதமர் மோடிக்கு இலங்கை நன்றி

வெள்ளிக்கிழமை, 22 ஜூன் 2018      இலங்கை
Image Unavailable

கொழும்பு: இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக ரூ.155 கோடி நிதியுதவி வழங்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்த நாடு நன்றி தெரிவித்துள்ளது. அந்த இலவச ஆம்புலன்ஸ் சேவைக்காக இந்தியா முதல் கட்டமாக கடந்த 2016-ம் ஆண்டில் ரூ. 51 கோடி வழங்கிய நிலையில், இந்த ஆண்டு ரூ.103 கோடி வழங்கியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் தேசியக் கொள்கை மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான இணையமைச்சர் ஹர்ஷா டி சில்வா அந்நாட்டு நாடாளுமன்றத்தில் கூறியதாவது: கடந்த 2015 மார்ச் மாதம் இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கு உதவ விரும்புவதாக கூறினார். இதையடுத்து, இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கும் திட்டத்துக்கு நிதியுதவி தேவைப்படுவது குறித்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அதற்கு பிரதமர் மோடி ஒப்புக் கொண்ட நிலையில், முதல் தவணையாக ரூ. 51 கோடி வழங்கப்பட்டது. அதனை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. 2-வது தவணையில் ரூ.103 கோடி வழங்கப்பட்டது. இதனால் இலங்கையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை சாத்தியமானது. இந்தியா, இலங்கைக்கு வழங்கிய அதிகபட்ச நிதியுதவிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த அருமையான பரிசுக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஹர்ஷா டி சில்வா கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து