முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெப்பசலனம் காரணமாக தமிழகம் புதுவையில் மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை மையம் அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் ஏராளமான நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தமிழகத்தின் முக்கிய அருவிகளில் நீர் பெருக்கெடுத்து கொட்டுவதால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. எனினும் சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தியும் வருகிறது.

இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றம் புதுச்சேரியில் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக சின்னக்கல்லார், தேவாலா -3 செ.மீ , கீரனூர், வால்பாறை-2 செ.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து