முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை கால்பந்து: செர்பியாவை வீழ்த்தி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்

வியாழக்கிழமை, 28 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டியில் செர்பியா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரேசில் அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

பிரேசில் முன்னிலை

32 நாடுகள் கலந்துகொண்டுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றன. மாஸ்கோவில் நடைபெற்ற லீக் போட்டியில் பிரேசில், செர்பியா அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டி இரு அணிக்கும் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இப்போட்டி தொடங்கியது முதல் இரு அணியும் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். முதல் பாதிநேர ஆட்டத்தின் 36-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் பாலின்ஹோ சிறப்பான முறையில் கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

தியாகோ சில்வா கோல்

செர்பியா அணியினர் முதல் பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் பிரேசில் அணிக்கு சாதகமாக அமைந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் தியாகோ சில்வா கோல் அடித்தார். இதனால் பிரேசில் அணி 2-0 என முன்னிலை பெற்றது. செர்பியா அணி இறுதிவரை கோல் அடிக்காததால், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து