முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 86,000 கோடி மதிப்பிலான அமெரிக்க பொருள்களுக்கு கனடா கூடுதல் வரி விதிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

ஒட்டாவா : அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் இறக்குமதி வரி விதிப்புக் கொள்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் உலோகம் மற்றும் உணவுப் பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.

இது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் 1,660 கோடி கனடா டாலர் (சுமார் ரூ.86,000 கோடி) மதிப்பிலான இரும்பு, அலுமினியம் மற்றும் நுகர்வோர் பொருள்கள் மீது கூடுதல் இறக்குமதி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த கூடுதல் வரி விதிப்பு அமலுக்கு வருகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் ஜஸ்டின் டுரூடோ, அமெரிக்கப் பொருள்கள் மீதான இந்த கூடுதல் வரி விதிப்பு தவிர்க்க முடியாது என்பதை அவரிடம் எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, இருதரப்பு வர்த்தகம் குறித்து தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசுவதற்கு இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். கனடா நாட்டுப் பொருள்கள் மீது அதிபர் டிரம்ப் ஜூன் மாதம் 1-ம் தேதி அறிவித்த வரி விதிப்புகளுக்கு பதிலாக, அமெரிக்கப் பொருள்கள் மீது கூடுதல் வரி விதிப்பதைத் தவிர கனடாவுக்கு வேறு வழியில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து