முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காரைக்குடியில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மஞ்சுவிரட்டால் மக்கள் உற்சாகம்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      சிவகங்கை
Image Unavailable

காரைக்குடி:-காரைக்குடியில் உள்ள தெற்குதெருவில் நுறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டபட்டுள்ள மஞ்சுவிரட்டு தொழுவம் உள்ளது ஆஙகிலேயர்கள்  காலத்திலேயே இங்கு மஞ்சுவிரட்டு நடைபெற்றது, தற்போது பதினான்கு ஆண்டுகளாக இங்கு மஞ்சுவிரட்டு நடைபெறவில்லை, இந்நிலையில் நாட்டார்கள் ஒன்று கூடி இந்த வருடம் மஞ்சுவிரட்டு நடத்துவதாக முடிவு செய்தனர் அதன் படி இன்று பிரமாண்டமாக மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
நாட்டார் மடத்திலிருந்து மாடுகள் ஊர்வலமாக தொழுவத்திற்கு அழைத்துவரப்பட்டன, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல்,புதுக்கோட்டை,
உள்பட பல மாவட்டங்களில் இருந்தும் 850 மாடுகள் கலந்து கொண்டன, 70க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் மாடுகளை அடக்க களம் இறங்கினர் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மஞ்சுவிரட்டில் மாடுகள் முட்டி 27 பேர் காயம்அடைந்தனர்.  டிஎஸ்பி கார்த்தி;கேயன் தலைமையில்   ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து