பொறியியல் தொழில் பிரிவு கலந்தாய்வு தேதிகள்: அண்ணா பல்கலை., அறிவிப்பு

வியாழக்கிழமை, 12 ஜூலை 2018      தமிழகம்
anna-university 2017 7 16

சென்னை : தொழில் பிரிவினருக்கான பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான கலந்தாய்வு 18 முதல் 20-ம் தேதி வரை நடக்கிறது.

கலந்தாய்வு...

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரெய்மெண்ட் உத்தரியராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு கடந்த 6-ம் தேதி முதல் நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள் 117 பேர் இடங்களை தேர்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து மறுநாள் நடைபெற்ற முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான கலந்தாய்விற்கு 230 பேர் அழைக்கப்பட்டு 67 பேர் இடங்களை தேர்வு செய்துள்ளனர். விளையாட்டு வீரர்களுக்கு நடைபெற்ற கலந்தாய்விற்கு 684 வீரர்கள் அழைக்கப்பட்டு, 282 இடங்களை தேர்வு செய்தனர்.

2,249 பேர் விண்ணப்பம்

இந்நிலையில் இரண்டாம் கட்ட சிறப்பு பிரிவில் முன்னாள் ராணுவத்தினரின் மகள்,மகனுக்கு காலியாக உள்ள 77 இடங்களுக்கு வரும் 16 ந் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கான 228 இடங்களுக்கும் 17-ம் தேதியும் கலந்தாய்வு நடைபெறும். மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 18 -ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தொழிற்கல்விப்பிரிவின் மூலம் பொறியியல் படிப்பில் சேர்வதற்காக ஆன்லைனில் 2,249 பேர் விண்ணப்பம் செய்தனர். அவர்களில் 1,692 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துக் கொண்டனர். இவற்றில் 91 பேரின் விண்ணப்பங்களை தகுதியற்றவை என நிராகரிக்கப்பட்டன. தகுதிப் பெற்ற 1,601 மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து