முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அசாம் மாநிலத்தில் பதவி ஏற்ற முதல் ‘திருநங்கை நீதிபதி’

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

அசாம் மாநிலம், லோக் அதாலத் நீதிமன்றத்தில் புதிய நீதிபதியாக திருநங்கை ஒருவர் பதவி ஏற்றுள்ளார்.

ஸ்வாதி பிதன் புராஹ் என்ற திருநங்கையே கம்ரூப் மாவட்டத்தில் உள்ள கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பதவி ஏற்றுள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில், குறிப்பாக அசாம் மாநிலத்தில் முதல் திருநங்கை நீதிபதி ஸ்வாதி பிதன் ஆவார். இதற்கு முன் மேற்கு வங்காளம் வடக்கு தினாஜ்புரில் ஜோய்தா முன்டலும், மஹாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் மாவட்டத்தில் வித்யா காம்பிள் ஆகிய திருநங்கைகள் நீதிபதி ஏற்கெனவே இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

லோக் அதாலத் நீதிபதிகாய ஸ்வாதி பிதன் பதவி ஏற்ற பின் ஊடகங்களிடம் கூறியதாவது:

''லோக் அதாலத் நீதிபதியாக என்னை நியமித்தது, சமூகத்துக்கு நேர்மறையான செய்தியை அறிவிக்கிறது. இதன் மூலம் மாற்றுப் பாலினத்தினவர்களுக்கு எதிரான வேறுபாட்டைக் களைய விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்படும்.

திருநங்கைகளின் திறமையும், தகுதியும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான தகுதியான வாய்ப்புகள் வழங்கப்பட்டு, அவர்கள் வாழ்க்கையில் கவுரவத்துடன் வாழ வழி செய்ய வேண்டும். என்னால் முடிந்தவரை சட்டத்துக்கு உட்பட்டு என்னிடம் வரும் வழக்குகளுக்கு, இயற்கை நீதி மாறாமல் தீர்வு காண்பேன்.

வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்வாதி

அசாம் மாநிலத்தில் திருநங்கைகள் ஏராளமானோருக்கு அடிப்படை அடையாள அட்டை இல்லாமல் குடும்பத்தைப் பிரிந்து வறுமையில் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேசிய அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்டவவை வழங்க வேண்டும் என்று விரைவில் உச்ச நீதிமன்றத்தில் முறையிடுவோம்.'' இவ்வாறு ஸ்வாதி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து