முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை காளவாசலில் ரூ.54 கோடியில் புதிய 4 வழித்தட மேம்பாலத்திற்கான பூமி பூஜை - முதல்வர் - துணை முதல்வர் தொடங்கி வைத்தனர்.

ஞாயிற்றுக்கிழமை, 15 ஜூலை 2018      தமிழகம்
Image Unavailable

மதுரை : மதுரை காளவாசலில் ரூ.54.07 கோடி மதிப்பில் புதிய பாலத்திற்கான பூமி பூஜையை முதலமைச்சர், துணை முதலமைச்சர் நேற்று துவக்கி வைத்தனர்.

மதுரை காளவாசலில் ரூ.54.07 லட்சம் மதிப்பில் 750 மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலம் 15 மாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று 14.03.2018 யில் நடைபெற்ற மாவட்ட  கலெக்டர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதற்கான பூமி பூஜை நேற்று காலை 10 மணியளவில் மதுரை காளவாசலில் நடைபெற்றது. இதில் பங்கேற்கப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8.50 மணி மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.

மதுரை விமான நிலையத்தில் முதலமைச்சரை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், கூட்டுறவ துறை அமைச்சர் செல்லூர். கே. ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், கதர் கிராம துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க.செயலாளர், வி.வி. ராஜன் செல்லப்பா, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.எஸ். சரவணன், பெரியபுள்ளான் (எ) செல்வம் பா. நீதிபதி, ஏ.கே. போஸ், கே.மாணிக்கம் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

வரவேற்பை ஏற்றுகொண்ட முதலமைச்சர்  மதுரை விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு தெற்குவாசல், பெரியார் பேருந்து நிலையம், அரசரடி வழியாக காளவாசல் வந்தடைந்தார். வரும் வழிநெடுக முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பை மக்கள் அளித்தனர். முன்னதாக விழா மேடைக்கு முன்னதாக வருகை புரிந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்திற்கு  அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மதுரை புறநகர் மாவட்ட  அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ, மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

காலை 9.45 அளவில் விழா மேடையில் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா திருஉருவ படத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மலர் தூவி மரியாதை செய்தனர். அதன் பின் 9.50 மணியளவில் காளவாசல் உயர்மட்ட பூமி பூஜைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிவாச்சாரியார்கள் பூர்ண கும்ப மரியாதையை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் வழங்கினர். அதன்பின் வேத மந்திரங்கள் ஓத செங்கலை வைத்து அடிக்கல்லை முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் நாட்டிய போது அப்போது வானத்தில் இருந்து ஜெயலலிதா ஆசீர்வாதம் செய்யும் வகையில் கார்மேக மழைச்சாரல் தூவியது. அப்போது திடலில் இருந்த பொதுமக்கள்  அம்மா வாழ்க என்று விண்ணை முட்டும் கரகோசத்தை எழுப்பினர்.

இதனையொட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், காதி மற்றும் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோபாலகிருஷ்ணன், உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் கே. மாணிக்கம், ராமு ஆகியோருக்கு சிவாவச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

அதன்பின் விழா மேடையில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரும் இந்த திட்டத்திற்கான கல்வெட்டை திறந்து வைத்தனர். மதுரை மக்களின் சார்பில் நினைவு பரிசினை முதலமைச்சருக்கும், துணை முதலமைச்சருக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜூ வழங்கினார்.  விழா முடிந்தபின் பரவையில் நடைபெறும் மாவட்டக் கழக அலுவலக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு செல்லும் வழியில் வழியெங்கும் சாலை இருபுறமும் மக்கள் அலைகடலென திரண்டு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கும் வரவேற்பை அளித்தனர்.

 

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து