முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அனைவருக்கும் மின்சாரம் குறித்து பிரதமர் காணொலி மூலம் கலந்துரையாடல்

வியாழக்கிழமை, 19 ஜூலை 2018      தேனி
Image Unavailable

போடி -     அனைவருக்கும் மின்சாரம் திட்டம் குறித்து பிரதமர் மோடி காணொலி மூலம் தேனி மாவட்ட பயனாளிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடினார்.
     இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் சென்றடைய வேண்டும், விவசாய விளைச்சலுக்கு தேவையான நிலத்தடி நீருக்கான மின்சாரம் வழங்குதல், சிறு மற்றும் வீட்டுத் தொழில் செய்பவர்களுக்கு மின்சாரம் வசதி பெறவும், சுகாதாரம், கல்வி, வங்கி சேவைகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காகவும் பாரத பிரதமரின் தீனதயாள் உபத்யாய கிராமின் ஜோதி யோஜனா தி்ட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
     இத்திட்டத்தின் பயன்கள் குறித்து வியாழக்கிழமை நாடு முழுவதும் உள்ள பயனாளிகளுடன் பாரத பிரதமர் மோடி கலந்துரையாடினார். தேனி மாவட்டத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடுவதற்காக பொது சேவை மையங்களை இயக்கி வரும் கிராம அளவிலான தொழில் முனைவோர் (CSC VLE) ஏற்பாடு செய்திருந்தனர். பெரியகுளம், வடுகபட்டி, தேனி, போடி, சின்ன ஓவுலாபுரம், சின்னமனூர், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் பொது சேவை மையங்களில் பிரதமரின் கலந்துரையாடல் கானொலி காட்சி மூலம் ஓளிபரப்பு செய்யப்பட்டது.
     இதில் சின்ன ஓவுலாபுரத்தில் பாரத பிரதமர் பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் மின்னாளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் பொது சேவை மைய மண்டல ஒருங்கிணைப்பாளர் அருள்செல்வன், தேனி மாவட்ட பொது சேவை மைய ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ், பொது சேவை மைய இயக்குநர் கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து