முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாதியிடமிருந்து வெளிநாட்டுப் பணம் பறிமுதல்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சனிக்கிழமை, 28 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: டெல்லியில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தை  சேர்ந்த தீவிரவாதி ஒருவரிடமிருந்து வெளிநாட்டுப் பணம் 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் நேபாள ரூபாய் 4,067 ஆகியவற்றை அமலாக்க இயக்குநரகம் பறிமுதல் செய்துள்ளது. இந்தப் பணம் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், 2010 பிப்ரவரி மாதத்தில் மஹ்மூத் உமர் மதானி என்பவர் மீது அமலாக்க இயக்குநரகத்தால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு, மஹ்மூத் உமர் மதனியின் உடைமையிலிருந்து சில ஆவணங்கள் தவிர இந்தியப் பணம் ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் மற்றும் நேபாள ரூ.4,067 ஆகியவற்றை பறிமுதல் செய்தது.

மதானி நேபாளத்தைச் சேர்ந்தவர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவுக்காக வேலை செய்து வருபவர். இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்காக இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் நோக்கத்தோடு இவர் செயல்பட்டு வருகிறார்.

பயங்கரவாதத்திற்கு இளைஞர்களை நியமிப்பதற்கும் அவர்களுக்கு நிதி அளிப்பதற்கும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவில் பயங்கரவாத மற்றும் நாட்டை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக லஷ்கர் - இ - தொய்பா தீவிரவாதிகளுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டுவதில் ஈடுபடுத்தப்பட்டார். இவரை தனியே விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம் அவரை குற்றவாளி எனக் குற்றம் சாட்டியதோடு ஐந்து வருட சிறைத் தண்டனையும் அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவரிடமிருந்து வெளிநாட்டுப் பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் மேலும் முடுக்கிவிடப்படும் விதமாக அரசின் பாதுகாப்பு செயல்பாடுகள் அமையும் என்று தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து