முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பில் 81 திட்டங்கள் உ.பி.யில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

லக்னோ: உத்தர பிரதேசத்தில் ரூ. 60 கோடி மதிப்பீட்டில் 81 புதிய திட்டங்களை பிரதமர் நரேந்தி மோடி நேற்று  துவக்கி வைத்தார்.

அதன் பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
உத்தர பிரதேசத்தில் ரூ. 60 ஆயிரம் கோடி மதிப்பிலான 81 புதிய திட்டங்கள் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு நிகழ்வாகும். ஏனென்றால் விரைவில் உத்தர பிரதேசத்தின் பொருளாதார நிலை ஒரு ட்ரில்லியன் டாலர்களாக உயரும். இந்த குறுகிய காலத்தில் இங்கு ஏற்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் சிறப்பாக உள்ளன. இதில் சில பழைய நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற ஒரு சூழலை உத்தர பிரதேசத்தில் நான் இதுவரை கண்டதில்லை. இதனால் மாநிலம் முழுவதும் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

மொபைல் போன் உற்பத்தியில் உத்தர பிரதேசம் முன்மாதிரியாக திகழ்கிறது. இங்கு தான் அதிகளவிலான மொபைல் போன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் மிகப் பெரிய அளவிலான மொபைல் உற்பத்தி அரங்கும், இங்குதான் 50-க்கும் மேற்பட்ட மொபைல் போன் நிறுவனங்களும் உள்ளன.

அதுபோன்று உத்தர பிரதேசத்தில் விரைவில் சோலார் உற்பத்தி அதிகரிக்கப் போகிறது. இதனால் மாநிலம் முழுவதும் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி வரையிலான மின் பயன்பாடு சேமிக்கப்படும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து