முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் பார்லி. தேர்தலில் வாக்குச் சீட்டு முறை: தலைமை தேர்தல் ஆணையத்திடம் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவு

வியாழக்கிழமை, 2 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி :  2019-ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைதான் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அந்த முறையில் நிறைய முறைகேடுகள் நடப்பதாகவும், அதன்மீது நம்பகத்தன்மை இல்லை என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன.

எதிர்க்கட்சிகள்...

இந்நிலையில் வரவிருக்கும் 2019 மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ், பகுஜன் சமாஜ், இடதுசாரிகள் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள் உள்ளிட்ட 17 கட்சிகள் இந்த கோரிக்கையை வலியுறுத்துவதாக தெரிகிறது. அதன்படி நாடு முழுவதும் 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைதான் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்று தீவிரமாக கோரிக்கை வைக்க இந்த கட்சிகள் முடிவு செய்துள்ளன. அத்துடன் இதுதொடர்பாக விரைவில் நேரடியாக ஆணையத்துக்குச் சென்று கோரிக்கை மனு அளிக்க உள்ளதாகவும் டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து