முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் 12 பள்ளிகளுக்கு தீ வைப்பு: மலாலா கடும் கண்டனம்

சனிக்கிழமை, 4 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பெண்களுக்கான பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டதன் காரணம், பெண்களின் கைகளில் புத்தகம் இருப்பது பயங்கரவாதிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக மலாலா தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் கில்கித் மற்றும் பல்திஸ்தானில் உள்ள பல்வேறு பகுதிகளில் உள்ள 12 பள்ளிகளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மகளிர் பள்ளிகளாகும். ஆனால், தாக்யா எனுமிடத்தில் உள்ள பள்ளியில் வெடிகுண்டு சத்தம் கேட்டதாக அப்பகுதி பத்திரிகையாளர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதில் 2 பள்ளிகளை வெடிகுண்டு வைத்து தகர்க்க முயற்சிக்கப்பட்டுள்ளதாகவும், 11 பள்ளிகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சில பள்ளிகளில் புத்தகங்களுக்கும் தீ வைத்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ வைப்பு சம்பவத்துக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இதற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மலாலா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

பெண்கள் கைகளில் புத்தகம் இருப்பதும், அவர்கள் படிப்பதும் பயங்கரவாதிகளை அச்சமடையச் செய்துள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் உடனடியாக புதிதாக கட்டப்பட வேண்டும். அதில் பயின்ற அனைத்து மாணவிகளும் சம்பந்தப்பட்ட வகுப்புகளுக்கு மீண்டும் செல்ல வேண்டும். அதன்மூலம் ஒவ்வொரு பெண்களும் தங்கள் கல்வி உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து