பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      விளையாட்டு
sindhu silver 2018 8 5

நான்ஜிங் : சீனாவில் நடந்த உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் பெற்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து.

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து எதிர்த்து மோதினார் .

இதற்கு முன் இதுவரை இருவரும் 11 முறை மோதி இருந்தனர். அதில் சிந்து 6 முறையும், கரோலின் மரின் 5 முறையும் வென்றிருந்தனர். இதனால், ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்துவை 21-19, 20-10 என்ற நேர்செட்களில் எளிதாகத் தோற்கடித்தார் கரோலின் மரின்.
முதல் செட்டில் கரோலினுக்கு கடும்நெருக்கடி கொடுத்து விளையாடினார் சிந்து. தொடக்கத்தில் புள்ளிக்கணக்கில் முன்னிலைப் பெற்று பயணித்த சிந்துவால், கரோலின் அதிரடி ஷாட்களுக்கும், ப்ளேஸ்களுக்கும், சர்வீஸ்களுக்கும் ஈடுகொடுக்க முடியவில்லை. பல முறை சிந்துவும், சரிசமமான புள்ளிகளை எட்டிய போதிலும், கரோலின் இறுதியாக 21-19 என்ற கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார்.

2-வது செட்டில் முற்றிலும் ஆட்டத்தைத் தனது கையில் எடுத்துக் கொண்டு கரோலின் விளையாடினார். மிகுந்த போராட்டம் குணம் கொண்டவராக கருதப்படும் சிந்து, 2-வது செட்டில் கரோலினின் அனல் பறந்த ஆட்டத்தின் முன் ஈடுகொடுத்து விளையாட முடியவில்லை. முடிவில் 20-10 என்ற கணக்கில் சிந்துவை சாய்த்தார் கரோலின்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து