கருணாநிதி போன்ற சிறந்த ராஜதந்திரியை இனி பார்க்க முடியாது: சோனியா காந்தி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
sonia gandhi(N)

புதுடெல்லி : கருணாநிதி போன்ற சிறந்த ராஜதந்திரியை இந்த நாடு இனி பார்க்க முடியாது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார்.

இதனிடையே தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், கருணாநிதி போன்ற சிறந்த ராஜதந்திரியை இந்த நாடு இனி பார்க்க முடியாது. கருணாநிதி தமிழக அளவிலும், இந்திய அளவிலும் மிகப்பெரிய அரசியல் தலைவர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது வாழ்க்கையை சமூகநீதிக்காகவே அர்ப்பணித்தவர். தந்தையை போன்ற கருணாநிதியின் மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு பேரிழப்பு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து