முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 போலீஸ் அதிகாரிகளுக்கு தங்கப்பதக்கங்கள்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழங்குகிறார்

செவ்வாய்க்கிழமை, 14 ஆகஸ்ட் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு தங்க பதக்கங்கள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

புலன் விசாரணைப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்குச் சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணைக்கான சிறப்புப் பணிப் பதக்கங்களை வழங்கிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.

1. எஸ்.பி.லாவண்யா, (கூடுதல் காவல் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு, குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை).
2. எஸ்.நமசிவாயம், (துணை காவல் கண்காணிப்பாளர், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை).
3. பெ.உலகநாதன், (காவல் ஆய்வாளர், கம்பம் வடக்கு காவல் நிலையம், தேனி மாவட்டம்).
4. கு.கிருஷ்ணமூர்த்தி, (காவல் ஆய்வாளர், நொளம்பூர் காவல் நிலையம், சென்னை பெருநகர காவல்).
5. எம்.சரவணன், (காவல் ஆய்வாளர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, நாகப்பட்டினம் மாவட்டம்).
6. எம்.கிளாஸ்டின் டேவிட், (காவல் ஆய்வாளர், மத்திய குற்றப்பிரிவு, சென்னை பெருநகர காவல்).
7. ஜெ.மகேஷ்குமார், (காவல் ஆய்வாளர், தெப்பக்குளம் சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் நிலையம், மதுரை மாநகர்).
8. சித்ராதேவி, (காவல் ஆய்வாளர், குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, தேனி மாவட்டம்).
9. ஜெ.ஜெயந்தி, (காவல்ஆய்வாளர், இருப்புப் பாதை காவல் நிலையம், ஜோலார்பேட்டை).
10. ஆர்.சுரேந்தர், (காவல் உதவி ஆய்வாளர், கண்டோன்மென்ட் காவல் நிலையம், திருச்சி மாநகரம்).
பொதுச்சேவைக்கான பதக்கம்
இதே போன்று பொதுமக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்க்கண்ட காவல்துறை அதிகாரிகளுக்கு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
1. மகேஷ்குமார் அகர்வால், (காவல் ஆணையர், மதுரை மாநகரம், தற்போது காவல்துறை தலைவர், குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை).
2.ஜா.முத்தரசி, (காவல்துறை உதவி தலைவர், (நிர்வாகம்), காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்,சென்னை).
3. தெ.கண்ணன், (காவல் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை, சென்னை).
4. த. ராஜ்நாராயணன், (காவல் ஆய்வாளர் (தொழில்நுட்பம்) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை, அயல்பணி இயக்குநர் அலுவலகம், சென்னை).
5. வி.ஆனந்தராஜன், (காவல் உதவி ஆய்வாளர், திட்டச்சேரி காவல் நிலையம், அயல்பணி, நாகப்பட்டினம் மாவட்ட தனிப்பிரிவு).

தங்க பதக்கம், ரூ.25 ஆயிரம்

விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவரும் தலா 8 கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் பெறுவார்கள். மேற்கண்ட விருதுகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் சிறப்பு விழாவில் மேற்கூறிய காவல்துறை அதிகாரிகளுக்கு அளிக்கப்படும். இவ்வாறு அரசு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து