முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதி மக்கள் வழியெங்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உற்சாக வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 26 ஆகஸ்ட் 2018      தேனி
Image Unavailable

 போடி, -தேனி மாவட்டம் தேவராம் அருகே சுத்தகங்கை ஓடையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து புறப்பட்ட தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு  வழியெங்கும் கிராம மக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
தேனி மாவட்டம் தேவாரம், போடிநாயக்கனூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்கள் வானம் பார்த்த பூமியாகவே இருந்து வந்தன. இப்பகுதி விவசாயிகள் மழை காலங்களில் மட்டுமே விவசாயம் பார்த்து வந்தனர். மற்ற நேரங்களில் மானாவாரி விவசாயமான மக்காசோளம் உள்ளிட்ட சில பயிர்களை மட்டுமே விவசாயம் செய்து வந்தனர். இதுபோன்ற மானாவாரி விவசாயங்களில் போதிய வருமானம் கிடைக்காததால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் முல்லை பெரியார் ஆற்றிலிருந்து 18ம் கால்வாயில் வரும் தண்ணீர் லோயர்கேம்ப், கம்பம், உத்தமபாளையம், தேவாரம், நாகலாபுரம் வழியாக தேனி வீரபாண்டி அருகேயுள்ள முல்லைபெரியார் ஆற்றில் கலக்கிறது. எனவே 18ம் கால்வாயை தேவாரம் பகுதியிலிருந்து பொட்டிபுரம், ராசிங்காபுரம், சிலமலை, மேலச்சொக்கநாதபுரம் மற்றும் போடிநாயக்கனூர் ஆகிய 34 கிராமங்களின் வழியாக நீட்டிப்பு செய்யுமாறு போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.  இந்த மனு மீது தமிழக முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கவனத்திற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொண்டு சென்றார். இம்மனுவை பரிசீலித்த  புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான  இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டார். மேலும் இத்திட்டத்தினை 14.10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீட்டிப்பு செய்து அதற்காக 48 கோடியை ஒதுக்கீடு செய்தார். 18ம் கால்வாய் நீட்டிப்பு பணிகள் கடந்த 2018 மார்ச் மாதம் நிறைவடைந்தது.
 தற்போது 18ம் கால்வாய் நீட்டிப்பு பகுதிகளுக்கு சோதனை ஓட்டமாக 7 நாட்களுக்கு தேவாரம் சுத்தகங்கை ஓடையிலிருந்து 200 கன அடி வீதம் தண்ணீரை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தமிழக துணை முதல்வருக்கு தேவாரம்-மூணாண்டிபட்டி, தே.ரெங்கநாதபுரம், மறவபட்டி, சோழநாயக்கன்பட்டி, புதுக்கோட்டை, பொட்டிபுரம், புதூர், ராசிங்காபுரம், சிலமலை, சில்லமரத்துபட்டி, தர்மத்துபட்டி, மேலசொக்கநாதபுரம் விலக்கு, போ.ரெங்கநாதபுரம், மற்றும் போடிநாயக்கனூர் உள்ளிட்;ட பகுதிகளில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் தமிழக துணை முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்கள் பூரண கும்ப மரியாதை கொடுத்தும், ஆரத்தி எடுத்தும், பல இடங்களில் தள்ளாத வயதான மூதாட்டிகள் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு நன்றி தெரிவித்து பொட்டு வைத்து ஆசிர்வதித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி.கே ஜக்கையன்,  தேனி மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார்,; பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஓ.ராஜா, ஒன்றிய செயலாளர்கள் ஆண்டிபட்டி லோகிராஜன், சின்னமனூர் விமலேஸ்வரன், போடிநாயக்கனூர் சற்குணம், நகர செயலாளர்கள் போடிநாயக்கனூர் பழனிராஜ், சின்னமனூர் ராஜேந்திரன், பெரியகுளம் நகர துணை செயலாளர் அப்துல்சமது, கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு தலைவர் வி.ப.ஜெயபிரதீப்,  பாசறை மாவட்ட செயலாளர் நாராயணன், மாவட்ட மாணவரணி துணை தலைவர் பாஸ்கரன் மற்றும் நகர, ஒன்றிய பேரூர், கிளை கழக, சார்பு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து