முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்திட வேண்டும்: நூலகர் தினவிழாவில் முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் பேச்சு:

செவ்வாய்க்கிழமை, 28 ஆகஸ்ட் 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு வழக்கத்தை ஊக்குவித்திட வேண்டும் என திருமங்கலத்தில் நடைபெற்ற நூலகர் தினவிழாவில் முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் வலியுறுத்தி பேசினார்.
திருமங்கலம் கிளை நூலகம்,வாசகர் வட்டம் மற்றும் திருமங்கலம் ரோஸ் அரிமா சங்கம் இணைந்து நடத்திய நூலகர் தினவிழா விருதுநகர் சாலையிலுள்ள விஜய் மஹாலில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதுரை மாவட்ட நூலக அலுவலர் ந.பாண்டுரங்கன் தலைமை வகித்தார்.திருமஙகலம் ரோஸ் அரிமா சங்க பட்டயத் தலைவர் அனிதா.வி.பால்ராஜ்,செயலாளர் ரம்யா.சி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திருமங்கலம் கிளை நூலகத்தின் இரண்டாம் நிலை நூலகர் த.இளங்கோ வரவேற்று பேசினார்.ஏராளமானோர் கலந்து கொண்ட இவ்விழாவில் திண்டுக்கல் தொகுதியின் முன்னாள் எம்.பி., என்.எஸ்.வி.சித்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நூலகர் தினவிழாவை முன்னிட்டு திருமங்கலம் ஊதிய மைய நூலகப் பணியாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 40-50 ஆண்டுகளுக்கு முன்பாக திருவிக தோழமை கழகம் என்ற இயக்கத்தை ஆரம்பித்து இலக்கிய தொண்டாற்றியிருக்கிறோம்.தற்போது திருமங்கலம் இலக்கிய பேரவை,கம்பன் கழகம் போன்றவை இன்றும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அங்குள்ள நூலகத்திற்கு சென்று புத்தகங்களை வாசிப்பது வழக்கம். திருமங்கலம் நகரிலுள்ள நூலகம் உறுப்பினர்கள்,புரவலர்கள்,பெரும் புரவலர்கள் மற்றும் பெரும் கொடையாளர்களை சேர்ப்பதில் தொடர்ந்து சாதனை படைத்து வருவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நான் எம்.பி.யாக இருந்தபோது இந்த நூலகத்திற்கு நிதி தரமுடியாமல் போனது வருத்தமாக உள்ளது.வாசிப்பு பழக்கம் குறைந்து வரும் தற்போதைய காலகட்டத்தில் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வாசிப்பு பழக்கத்தை ஊக்குவித்திட வேண்டியது அவசியமாகும் என்று பேசினார்.
இவ்விழாவில் அனுராஜ் மெட்ரிக் பள்ளி தாளாளர் டாக்டர்.எ.சசிகுமார்,திருமங்கலம் இலக்கிய பேரவை தலைவர் சு.சங்கரன்,தலைமை ஆசிரியர்கள் சியாமளா,அனந்தராமன்,புலவர்.வெ.சீனிச்சாமி,அரிமா சங்க நிர்வாகிகள் செய்பகா முரளிதரன்,திருப்பதி,பாஸ்கரசேதுபதி,பேரையூர் நூலகர் கிருபாமூர்த்தி மற்றும் வாசகர் வட்டத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழாவின் நிறைவில் திருமங்கலம் கிளைநூலக மூன்றாம் நிலை நூலகர் சு.வே.மலர்விழி அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து