முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியாழனில் பூமியை விட 5 மடங்கு அதிக தண்ணீர் இருக்க வாய்ப்பு நாசா விஞ்ஞானிகள் குழு கண்டுபிடிப்பு

திங்கட்கிழமை, 3 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்,வியாழன் கிரகத்தில் பூமியை விட 5 மடங்கு தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான் விஞ்ஞானிகள் குழு சேர்ந்து இதை கண்டுபிடித்து இருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்தான் நிலவில் தண்ணீர் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோல், செவ்வாயிலும் தண்ணீர் இருந்ததற்கான அடையாளம் கிடைத்தது. இப்போது வியாழனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது.
கடந்த டிசம்பர் 7, 1995-ல் நாசா கலிலியோ என்ற சோதனை சாதனத்தை விண்ணுக்கு அனுப்பியது.

வியாழன் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நோக்கி 22 ஆண்டுகளுக்கு முன் நாசா இதை அனுப்பியது. ஆனால் அப்போது இந்த விண்கலம், அங்கு தண்ணீர் இருப்பது எதையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் பெரிய சிகப்பு புள்ளி ஒன்று இருப்பதை மட்டும் கண்டுபிடித்தது.

இந்த விண்கல் வியாழனின் துணைக்கோள்கள் பனிக்கட்டியால் நிரம்பி இருப்பதாக கூறியது. இந்த நிலையில் தற்போது, வியாழனில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது வியாழனில் சூரியனை விட 9 மடங்கு ஆக்சிஜன் அதிகம் உள்ளது. அதேபோல் பூமியை விட பல மடங்கு அங்கு வளிமண்டலம் அடர்த்தியாக உள்ளது. இதனால் கண்டிப்பாக அங்கு தண்ணீர் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. நாசா விஞ்ஞானிகள், கிளெம்சன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணைந்து இதை கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, வியாழனில் உள்ள பெரிய அளவிலான செந்நிற புள்ளி  முழுக்க முழுக்க தண்ணீரால் நிரம்பி உள்ளது. பூமியில் உள்ள அதிநவீன தொலைநோக்கியை வைத்தும், நாசா ஆய்வக பொருட்களை வைத்தும் இதை கண்டுபிடித்துள்ளனர். இதை சுற்றி பெரிய அளவில் மேகமூட்டம் நிலவுவதாக கூறப்பட்டுள்ளது. அதாவது அந்த செந்நிற புள்ளியில் மட்டும், பூமியில் உள்ள கடல்களை விட அதிக தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மொத்தமாக அந்த கிரகத்தில், பூமியை விட 5 மடங்கு அதிகம் தண்ணீர் இருக்க வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து