தேனி பெத்தாட்சி விநாயகர் திருக்கோவிலில் சதுர்த்தி விழா

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      தேனி
13 periyakulam news

தேனி - தேனியில் பிரசித்தி பெற்ற பெத்தாட்சி விநாயகர் திருக்கோவிலில் நேற்று சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தேனி பெத்தாட்சி விநாயகர் கோவில் நேற்று காலையில் மஹா கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மதியம் 1008 லிட்டர் பாலால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தயிர், இளநீர், திருமஞ்சனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அபிஷேகங்களும்  நடைபெற்று பின்னர் விநாயகருக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. இவ்விழாவில் 
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு  சுவாமி தரிசனம் செய்தனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து