அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனைத்து சிகிச்சைகளும் பெற்றிடும் வகையில் செயல்படத் துவக்கப்பட்டுள்ளது சிவகங்கையில் அமைச்சர் ஜி. பாஸ்கரன் தகவல்

வெள்ளிக்கிழமை, 14 செப்டம்பர் 2018      சிவகங்கை
14 mister news

    சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புதிய சிகிச்சை பிரிவு மையங்கள் மற்றும் பொது சுகாதார வளாகங்கள் திறப்பு விழா நிகழ்;ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெ.ஜெயகாந்தன் தலைமையில் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன்   முன்னிலையில்   கதர் மற்றும் கிராமத்  தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்து தெரிவிக்கையில்
   சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறந்து விளங்கிட   இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா   முதல்வராக இருந்த காலத்தில் பல்வேறு திட்டங்களை வழங்கி சிவகங்கை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த தலைவர் ஆவார்.  அவர் வழியில் ஆட்சி நடத்தும்   தமிழக முதலமைச்சர்   மற்றும் துணை முதலமைச்சர்   பல்வேறு திட்டங்களை உடனுக்குடன் வழங்கி வருகிறார்கள்.  இப்பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாகும். முன்பெல்லாம் மருத்துவ சிகிச்சை பெற மதுரை போன்ற பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டியிருந்த நிலையை மாற்றி சிவகங்கையிலேயே தேவையான அனைத்து சிகிச்சைகளையும் பெற்றிட   புரட்சித் தலைவி அம்மா அவர்களால் திட்டங்கள் தீட்டப்பட்டு இத்திட்டங்கள் ஒவ்வொன்றாக செயல்படத் துவங்கி இன்று மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் வழங்கி மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அளவிற்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.
   மேலும் பொதுமக்களின் தேவைகளை உணர்ந்து இன்று சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு, புற்றுநோய் கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு, கண்சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது.  இதன் மூலம் இப்பகுதியில் உள்ள மக்களின் தேவையை உணர்ந்து தேவைகளின் அடிப்படையில் இந்த மையங்கள் செயல்படத் துவங்கியுள்ளன.  சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவின் மூலம் வாரம் இரண்டு நாள் வெளிநோயாளிகளுக்கு சுமார் 100 நபர்களுக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.  உள்நோயாளிகள் பிரிவில் தினந்தோரும் தேவைப்படுவோருக்கு சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது.  தற்பொழுது சிறுநீரக அறுவை சிகிச்சைப் பிரிவு மையம் தனியாக துவக்கப்பட்டுள்ளதால் இங்கு தேவையான படுக்கைவசதிகளும்  அமைக்கப்பட்டுள்ளதால் சிகிச்சைக்காக வரும் அனைவருக்கும் காலதாமதமின்றி தேவையான சிகிச்சை வழங்க முடியும். 
  இதேபோல் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டுள்ளது என்பது ஏற்கனவே வெளியில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும்; இந்த சிகிச்சைக்கு வருபவர்களுக்கு 90 சதவீதம் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் சிகிச்சை வழங்கப்பட்டுவருகிறது. தற்பொழுது தனிபிரிவாக அமைக்கப்பட்டு தேவையாக படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளதால் இதன் மூலம் உள்நோயாளி மற்றும் வெளிநோயாளிகளுக்கு இனி தேவையான சிகிச்சைகள் சிறப்பு மருத்துவர்கள் மூலம் உடனுக்குடன் வழங்கப்படும்.
     தேவையான சிகிச்சை பிரிவுகள் விரிவுபடுத்துவது மட்டுமின்றி தேவையான சிறப்பு மருத்துவர்களும் பணியமர்த்தப்பட்டு பணியாற்றி வருகிறார்கள். மேலும் என்னென்ன தேவை என்பதை கேட்டு நமது சுகாதார துறை அமைச்சர் உடனுக்குடன் செய்து தருகிறார்கள். பொதுமக்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென   கதர் மற்றும் கிராமத்  தொழில்கள் வாரியத் துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் தெரிவித்தார்.
 பின்னர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 10இலட்சம் மதிப்பீட்டில் 4 கழிப்பறை கட்டடிடங்கள் கட்டப்பட்டுள்ளதை   அமைச்சர் தெரிவித்துள்ளார். 
  இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர்  க.லதா, சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.வனிதா, உறைவிட மருத்துவர் மரு.மகேந்திரன், நிலைய அலுவலர்கள் மரு.குழந்தை ஆனந்தன், துணைநிலை அலுவலர் மரு.இராஜராஜன், சிவகங்கை கோட்டாட்சியர் செல்வக்குமாரி,  பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து