முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முத்தலாக் தடை அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

புதன்கிழமை, 19 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியதை அடுத்து நேற்றே ஜனாதிபதியும் ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இந்த சட்டம் உடனே அமுலுக்கு வருகிறது.

எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

முஸ்லிம் ஆண்கள் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை சட்டவிரோதம் என்று கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இந்த நடைமுறைக்கு மாற்றாக புதிய சட்டத்தை இயற்ற மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியது. அதன்படி கடந்த 28-ம் தேதி முத்தலாக் தடை மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா அவசர கதியில் தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும் பல்வேறு குழப்பங்கள் இருப்பதாகவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. எனினும் மக்களவையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளதால் கடும் எதிர்ப்புகளுக்கு நடுவே அன்றைய தினமே மசோதா நிறைவேற்றப்பட்டது.

மசோதா நிறைவேறவில்லை

இந்த சட்டத்தின் மூலம் முத்தலாக் நடைமுறையைப் பின்பற்றும் முஸ்லிம் ஆண்களுக்கு அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யப்பட்டது. எனினும் மாநிலங்களவையில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தால் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை.

அமைச்சரவை ஒப்புதல்...

இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் முத்தலாக் நடைமுறைக்கு தடை விதிக்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த மசோதாவில் சில திருத்தங்களை மேற்கொண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. பிறகு நேற்றே மத்திய அரசின் இந்த அவசரச் சட்டத்திற்கு ஜனாதபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.

முத்தலாக் தடை மசோதா மக்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது,

நிறுத்த வேண்டும்...

இஸ்லாமிய பெண்களுக்கு நீதி வழங்கும் வகையில் முத்தலாக் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முத்தலாக் விவகாரத்தை வைத்து நடத்தப்பட்ட ஓட்டு வங்கி அரசியலுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது. இதை வைத்து அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் இனியாவது நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மனைவி அல்லது அவரது ரத்த சம்பந்தம் உடைய நெருங்கிய உறவுகள் வழக்கு தொடர்ந்தால் மட்டும் இது குற்றமாக கருதப்படும். இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து