முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாகுமரியில் நாளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-எம்.ஜி.ஆரின் நினைவை போற்றும் வகையிலும், அவர்மக்களுக்கு ஆற்றிய பணிகள், அவர் பற்றிய வாழ்க்கை வரலாறு இன்றைய இளைஞர்கள் மற்றும்வருங்கால சந்ததியினர் அறிந்திடும் வகையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, தமிழக அரசின் சார்பில்அனைத்து மாவட்டங்களிலும் மிகச் சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டு, இதுவரை 30 மாவட்டங்களில் நடைபெற்றுள்ளது.

கிறித்துவக் கல்லூரியில்.. நாளை (22-ம் தேதி) கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் ஸ்காட் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில் மாலை 3.00 மணிக்கு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆரின் உருவப்படத்தினை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கியும், அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் விழாவில் பேச உள்ளார்.

அமைச்சர்கள் பங்கேற்பு....இவ்விழாவிற்கு, சபாநாயகர் ப.தனபால் தலைமை வகிக்கிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார். மக்களவை துணைத் தலைவர் டாக்டர் மு.தம்பிதுரை, மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்.பொன் இராதாகிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் விஜயகுமார் சிறப்புரையாற்றுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து