முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன பொருட்களுக்கு வரி விதிப்பு:அமெரிக்க பொருளாதாரம் சீரழியும் என டிரம்புக்கு வால்மார்ட் எச்சரிக்கை

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்,சீனப் பொருட்களுக்கு 14 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய வரியை விதித்துள்ள டிரம்பின் நடவடிக்கையால், அமெரிக்காவில் பொருட்கள் விலை கடுமையாக அதிகரித்து, பொருளாதாரம் சீரழியும் ஆபத்து உள்ளதாக வால்மார்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையேயான வரிப்போர் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், சீனப் பொருட்களுக்கு மேலும் இந்திய மதிப்பில் சுமார் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான கூடுதல் வரியை அமெரிக்கா  விதித்துள்ளது. வரும்  24-ம் தேதி முதல் இந்த புதிய வரிவிதிப்பு அமலுக்கு வருகிறது. டிரம்ப் விதித்த இந்த வரி விதிப்பால் சீன நிறுவனம் மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அமெரிக்காவின் முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனமான வால்மார்ட் கடும் பாதிப்புகளை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வால்மார்ட் சார்பில் டிரம்ப் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், சீனா பொருள்களுக்கு வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கையால் வால்மார்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிகஅளவு உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்ற முறையில் இந்த வரியால் பொருட்களின் விலை உயரும் என்பதை தெரியப்படுத்துகிறோம்.
அமெரிக்காவின் பொருளாதாரமே கடுமையாக பாதிக்கும். எனவே வரி விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்காவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து