முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல், கடன் தள்ளுபடி உள்ளிட்டவிவகாரத்தில் தொடர்ந்து பொய் கூறுகிறார் ராகுல்: அருண் ஜெட்லி குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,ரபேல் போர் விமான ஒப்பந்தம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.அரசியல் பொதுக் கூட்டங்களில் ராகுல் காந்தி பேசும்போது, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது; 12 தொழிலதிபர்களின் ரூ.2.5 லட்சம் கோடி வாராக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்து விட்டது' என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

அவரது குற்றச்சாட்டுகளை மறுக்கும் விதமாக, ஜெட்லி தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:ரபேல் ஒப்பந்தம், 15 தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி என ஒவ்வொரு விஷயத்திலும், கோமாளியைப் போல் ராகுல் காந்தி தொடர்ந்து பொய் கூறி வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி முடிவுக்கு வந்தபோது, வாராக்கடன் தொகை, ரூ.2.5 லட்சம் கோடியாக இருந்தது. ஆனால், உண்மைகளை அவர்கள் மூடி மறைத்து விட்டனர். மேலும், கடன் சீரமைப்பு உள்ளிட்ட பல திட்டங்களின் கீழ் நிதி மோசடியாளர்கள காப்பாற்றப்பட்டனர்.

கடந்த 2015-ஆம் ஆண்டில் ரிசர்வ் வங்கியின் சொத்து தர மதிப்பீட்டுக் குழு, வாராக் கடன்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. அப்போதுதான், நாட்டின் உண்மையான வாராக்கடன் ரூ.8.96 லட்சம் கோடி என்று தெரிய வந்தது.இந்த வாராக்கடன் அதிகரிப்புக்கு தற்போதைய மத்திய அரசு காரணமல்ல. மேலும், வாராக்கடனை வசூலிப்பதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து