முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

40 தொகுதிகளிலும் ஜெயிப்போம் என்று தினகரன் கூறுவது உலக மகா காமெடி துணை மு்தல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று தினகரன் கூறியிருப்பது உலக மகா நகைச்சுவை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பதிலளிக்க முடியாது....தி.மு.க. தலைவர் ஸ்டாலின், காற்றாலை மின்சாரம் குறித்து கூறிய குற்றசாட்டை மின்சாரதுறை அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார். மீண்டும் பேசினால் நீதிமன்றம் செல்லகூடும். நீதிமன்றங்கள் குறித்தும், காவல்துறை குறித்தும் எச்.ராஜா என்ன மாதிரி மனநிலை பேசி இருக்கிறார் என தெரியவில்லை. அவருக்கெல்லாம் பதிலளிக்க முடியாது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை குறித்து சுப்ரீம் கோர்ட்டன் வழிமுறைப்படி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

உலக மகா காமெடி....இலங்கை போர் நடத்தபோது உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணைபோன தி.மு.க.-காங். கூட்டணியை எதிர்த்து அறிவித்தபடி 25-ம் தேதி பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் 40 தொகுதிகளில் தினகரன் வெற்றி பெறுவார் என்ற கருத்து உலக மகா காமெடி இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து