முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கோப்பை சூப்பர் 4-சுற்று: பங்களாதேசத்திற்கு எதிராக இந்திய அணி அபார வெற்றி!

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷூக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

6 அணிகள்...

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ் தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. லீக் சுற்று முடிவில் ‘ஏ’ பிரிவில் இருந்து இந்தி யா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் இருந்து ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறின. இரண்டு லீக்கிலும் தோல்வி யடைந்த இலங்கை, ஹாங்காங் அணிகள் வெளியேறிவிட்டன.

மெஹிடி 42 ரன்...

துபாயில் நடந்த சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் இந்தியா - பங்களாதேஷ் அணிகள் மோதின. இந்திய அணியில் காயமடைந்த ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக. எதிர்பார்த்ததைப் போல சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 16 ரன்களுக்கு இரண்டு விக்கெட்களை இழந்தது. பின்னர், ரஹிம் 21, மோர்டஸா 26 எடுக்க மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால், அந்த அணி 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், மெஹிடியின் சிறப்பான ஆட்டத்தால் கடைசியில் அந்த அணி ரன்களை சேர்த்தது. மெஹிடி 50 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அவர் விக்கெட்டை தொடர்ந்து 49.1 ஓவரில் பங்களாதேஷ் 173 ரன்னில் சுருண்டது.

ஜடேஜா 4 விக்கெட்...

இந்திய அணி தரப்பில் ஓராண்டுக்குப் பின், ஒருநாள் போட்டியில் களமிறங்கிய ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்து தனது வருகையை நிரூபித் தார். புவனேஸ்வர்குமார், பும்ரா தலா 3 விக்கெட் எடுத்தனர். குல்தீப், சேஹலுக்கு ஒரு விக்கெட் கூட கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் நடந்ததை போல், இந்தப் போட்டியிலும் இந்திய அணி கடைசி நேரத்தில் ரன்களை விட்டுக்கொடுத்தது. 101 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்த நிலையில் 130 ரன்களுக்கு பங்களாதேஷ் ஆட்டமிழக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த அணி அதன்பிறகு 70 ரன்கள் எடுத்தது.

சிறப்பான தொடக்கம்

பின்னர் 174 ரன் என்ற இலக்கை நோக்கி நோக்கி இந்திய அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், கேப்டன் ரோகித் சர்மாவும் சிறப்பான தொடக்கத்தை உருவாக்கித் தந்தனர். தவான் 40 ரன்களில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ராயுடு 13 ரன்னில் ஆட்டமிழக்க, விக்கெட் கீப்பர் தோனி முன்வரிசையில் இறக்கப்பட்டார். மறுமுனையில் அதிரடி காட்டிய ரோகித், சிக்சர் அடித்து தனது 36-வது அரைசதத்தை எட்டினார். இலக்கை நெருங்கிய நேரத்தில் தோனி 33 ரன்களில் கேட்ச் ஆனார். இந்திய அணி 36.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து அபார வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 83 ரன்களுடனும் தினேஷ் கார்த்திக் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து