முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனி மாதிரி விளையாடிய ஷோயப் மாலிக்:பாக். முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 23 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய்,டோனி போல சிறப்பாக ஆடியதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை, வாசிம் அக்ரம் புகழ்ந்துள்ளார் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் போராடி வென்றது. அதில் கடைசி வரை களத்தில் நின்று வெற்றியை உறுதி செய்தார் அந்த அணியின் அனுபவ வீரர் ஷோயப் மாலிக். அவரை புகழ்ந்து டுவீட் போட்டுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம்.

பாகிஸ்தான் அணி இந்தியாவிடம் குரூப் சுற்றில் தோல்வி அடைந்தது. அந்த அழுத்தத்தோடு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஆடிய பாகிஸ்தான் அணி 258 ரன்களை அடிக்க திணறியது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்களின் சுழலை சமாளிக்க முடியாத பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் பொறுமையாக ஆடினர். கடைசி நேரத்தில் விக்கெட்களும் மளமளவென விழுந்தது. அந்த நேரத்தில் கடைசி ஓவரில் 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஷோயப் மாலிக் இரண்டு பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதைத் தான் புகழ்ந்துள்ளார் வாசிம் அக்ரம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து