முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேவாலயங்களுக்கு பாதிரியார் நியமனம் சீனா - வாடிகன் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்,சீனாவில் உள்ள தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமனம் செய்வது தொடர்பாக சீனா மற்றும் வாடிகன் இடையே வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:-சீன தேவாலயங்களுக்கு பாதிரியார்களை நியமிப்பது தொடர்பாக அரசுக்கும், வாடிகனுக்கும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹோலி சீ அனுமதி இல்லாமலேயே இந்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த ஒப்பந்தத்தின்படி, சீன அரசால் நியமிக்கப்பட்ட 7பாதிரியார்களுக்கு போப் பிரான்சிஸ் அங்கீகாரம் அளித்துள்ளார். இருப்பினும், இருதரப்புக்கும் ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தற்காலிகமானதே என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனாவில் மிக வேகமாக வளர்ச்சி கண்டு வரும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. கம்யூனிஸ்ட் நாடான சீனாவில் 9 கோடி கிறிஸ்தவர்கள் உள்ளதாக அதிகாரபூர்வமற்ற புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து