முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறும் அதிகாரம் நீக்கம்: காங்கிரஸ் வரவேற்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : தனியார் நிறுவனங்கள் ஆதார் எண்ணைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப் பிரிவு 57ஐ நீக்கி சுப்ரீம் கோர்ட்அளித்த தீர்ப்புக்கு காங்கிரஸ் கட்சி வரவேற்பு தெரிவித்துள்ளது.

ஆதார் சட்டத்தில் 57வது பிரிவை நீக்கியதை நாங்கள் வரவேற்கிறோம். ஆதார் எண்ணை கையாளும் அதிகாரத்தை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

அரசியல் சாசன அமர்வின்படி ஆதார் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ள சுப்ரீம் கோர்ட், அதில் சில திருத்தங்களை மேற்கொண்டிருப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிச் சேவை, செல்போன் சேவை, பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை உள்ளிட்டவற்றுக்கு ஆதார் கட்டாயமில்லை என்றும் சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து