சபரிமலை தீர்ப்புக்கு எதிராக டெல்லியில் ஆர்ப்பாட்டம்

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      இந்தியா
sass

புதுடெல்லி, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் செல்வதற்கு அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து டெல்லி நாடாளுமன்றச் சாலையில் ஐயப்ப பக்தர்கள்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் உள்ளிட்ட அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்டு கேரள அரசு இல்லம் நோக்கிப் பேரணியாகச் சென்று முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது ஐயப்பனை புகழ்ந்து பக்தி, பஜனை பாடல்களும் பாடப்பட்டன.

மேலும், இந்த விஷயத்தில் கேரள அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரி, கேரள இல்ல அதிகாரிகளிடம் அவர்கள் மனு அளித்தனர். இந்த விஷயத்தில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து