முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை சேர்ந்த இருவருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

ஸ்டாக்ஹோம் : 2018-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நோபல் பரிசை வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் இணைந்து பெறுகின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள்.

2018 வருடத்திற்கான நோபல் பரிசுகள் கடந்த இரண்டு ஒரு வாரமாக அறிவிக்கப்பட்டு வருகிறது. சுவீடனின் ஸ்டாக்ஹோமில் நடந்த விழாவில் அறிவிப்பு வெளியாகி வருகிறது. இதுவரை வேதியியல், இயற்பியல், அமைதிக்கான நோபல் உள்ளிட்ட பிரிவுகளில் பரிசு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 2018-ம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நோபல் பரிசை வில்லியம் டி. நார்தாஸ், பால் எம். ரோமர் இணைந்து பெறுகின்றனர். இவர்கள் இருவரும் அமெரிக்காவை சேர்ந்தவர்கள். நீண்ட கால அடிப்படையிலான பொருளாதாரத்துக்கு உதவும் வகையில் தொழில்நுட்பங்களை உருவாக்கியதற்காகவும், பருவ நிலை மாற்றம் சார்ந்த பொருளாதார ஆய்வுக்காகவும் இவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.

பொருளாதார துறையில் இதுதான் மிக உயரிய விருது ஆகும். இந்த வருடமும் உலகின் முன்னணி பெண் பொருளாதார நிபுணர்கள் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக இதனால் புகார் எழுந்துள்ளது. இவர் பரிசு தொகையான 6.5 கோடி ரூபாயை பாதியாக பகிர்ந்து கொள்வார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து