முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 டெஸ்டில் 23 வெற்றி: இந்திய அணி புதிய சாதனை

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஐதாராபாத் : இந்திய அணி உள்ளூரில் 29 டெஸ்டில் 23-ல் வெற்றி பெற்றதன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளது.

முதல் முறையாக...

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நடந்த இந்த டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 311 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன் குவித்தது. 56 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. அம்பிரிஸ் அதிகபட்சமாக 38 ரன் எடுத்தார். உமேஷ் யாதவ் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் எடுத்தனர். 72 ரன் இலக்குடன் விளையாடிய இந்தியா விக்கெட் இழப்பின்றி இந்த ரன்னை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்தியா முதல் முறையாக 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடரை இழக்காமல்...

இந்த வெற்றி மூலம் இந்தியா 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 27 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. இந்திய அணி சொந்த மண்ணில் தொடர்ந்து 10-து டெஸ்ட் தொடரை கைப்பற்றி முத்திரை பதித்தது. 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து உள்ளூரில் டெஸ்ட் தொடரை இழக்காமல் கைப்பற்றி இருக்கிறது. ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக தலா 2 முறையும், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக தலா 1 முறையும் தொடரை வென்று இருந்தது.

புதிய வரலாறு படைக்கும்

ஆஸ்திரேலிய அணி 2 முறை உள்ளூரில் தொடர்ச்சியாக 10 டெஸ்ட் தொடரை (நவம்பர் 1994- நவம்பர் 2000, ஜூலை 2004- நவம்பர் 2008) கைப்பற்றி இருந்தது. அதோடு இந்தியா இணைந்தது. உள்ளூரில் மேலும் ஒரு டெஸ்ட் தொடரை வென்றால் இந்தியா புதிய வரலாறு படைக்கும். 2013 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்ளூரில் டெஸ்டில் ஆதிக்கம் செலுத்திய அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது. மொத்தம் 29 டெஸ்டில் 23-ல் வெற்றி பெற்றது. ஒரு டெஸ்டில் மட்டுமே தோற்றது. 5 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. இதற்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியா உள்ளூரில் 27 டெஸ்டில் 20-ல் வெற்றி பெற்றது, 2 டெஸ்டில் தோற்று 5 போட்டி ‘டிரா’ ஆனது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து