முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பசும்பொன்னில் தென்மன்டல ஐ.ஜி, மாவட்ட ஆட்சியர் ஆய்வு

செவ்வாய்க்கிழமை, 16 அக்டோபர் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

  கமுதி, -கமுதி பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா முன்னேற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட பலர் செவ்வாய்கிழமை ஆய்வு செய்தனர்.
 கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தி விழா, வரும் அக். 28,29,30 ஆகிய தேதிகளில்,  அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர், துணை முதல்வர், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உட்பட மத்திய, மாநில அமைச்சர்கள் பலர் வரவுள்ளனர். லட்சக்கணக்கான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தவுள்ளதால், இங்கு வருபவர்களுக்கு வி.ஐ.பி., வழித்தடம், பொதுமக்கள் வரும் வழித்தடங்கள், ஹெலிபேடு தளம், கழிப்பறை, சிசிடிவி கேமரா அமைப்பது தொடர்பாக தென்மண்டல ஐ.ஜி., சண்முகராஜேஸ்வரன், ராமநாதபுரம், சிவகங்கை டி.ஐ.ஜி. காமினி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ், மாவட்ட காவல் கண்காணிரப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, பரமக்குடி சார் ஆட்சியர் விஷ்ணுசந்திரன், கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தங்கபாண்டியன், வீரராகவன் (கிராம ஊராட்சிகள்), கமுதி உதவி காவல் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, வட்டாட்சியர் முருகேசன் மற்றும் நெடுஞ்சாலை, பொதுப்பணி, மின்வாரியம், சுகாதாரதுறை உட்பட பல துறை அதிகாரிகள் பங்கேற்றனர். பசும்பொன் தேவர் அறக்கட்டளை தலைவர் காந்திமீனாள் வரவேற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து