முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் ஆப்பிரிக்க தொடருக்கான அணி அறிவிப்பு ஏரோன் பிஞ்ச் கேப்டனாக நியமனம்

சனிக்கிழமை, 27 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடருக்கு டிம் பெய்ன் ஆஸ்திரேலிய ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு ஏரோன் பிஞ்ச் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே தொடருக்கு ஆஸி. அணிக்கு மீண்டும் ஜோஷ் ஹேசில்வுட், பாட் கமின்ஸ் திரும்பியுள்ளனர். மிட்செல் மார்ஷுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 2017-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஏரோன் பிஞ்ச் இரு ஒரு நாள் போட்டிகளில் ஆஸி. கேப்டனாக இருந்துள்ளார். 2019 உலகக் கோப்பைக்கும் பிஞ்ச்தான் கேப்டன் என்று தெரிகிறது.

டிம் பெய்ன் இனி ஒருநாள் அணிக்குள் நுழைவதே கடினம் என்றே தெரிகிறது. கேப்டன் பொறுப்பிலிருந்து மட்டுமல்லாமல் வீரராகவும் டிம் பெய்ன் நீக்கப்பட்டுள்ளார். காரணம் 5 ஒரு நாள் போட்டிகளில் டிம் பெய்ன் அடித்த மொத்த ஸ்கோர் 36, சராசரி 7.20. 33 வயதாவதாலும் இந்தியா மற்றும் ஆஷஸ் தொடர் வரவிருப்பதால் டெஸ்ட் போட்டியில் மட்டும் அவர் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளார். இவர் இல்லாததால் விக்கெட் கீப்பராக அலெக்ஸ் கேரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு:ஏரோன் பிஞ்ச் (கேப்டன்), ஜோஷ் ஹேசில்வுட் (துணை கேப்டன்), அலெக்ஸ் கேரி (வி.கீ), ஆஷ்டன் ஆகர், பாட் கமின்ஸ், நேதன் கூல்ட்டர்-நைல், டிராவிஸ் ஹெட், கிறிச் லின், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், டி ஆர்க்கி ஷார்ட், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஆடம் ஸாம்ப்பா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து