முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வார்னரை நோகடித்து ஸ்லெட்ஜிங்’ செய்த பில் ஹக்ஸ் சகோதரர்

ஞாயிற்றுக்கிழமை, 28 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : சிட்னியில் நடந்த கிளப்லெவல் கிரிக்கெட் போட்டியின் போது, டேவிட் வார்னரின் மனது வேதனைப்படும் வகையில் பில் ஹக்ஸின் சகோதரர் ஸ்லெட்ஜிங் செய்ததால், வார்னர் பேட்டிங்கை பாதியிலேயே நிறுத்தி வெளியேறினார்.

கடந்த 2014-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் விளையாடும் போது, தலையில் கிரிக்கெட் பந்துபட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்த இளம் வீரர் பில் ஹக்ஸ். இவரின் சகோதரர் ஜேஸன் ஹக்ஸின் ஸ்லெட்ஜிங்கால் வார்னர் வேதனை அடைந்து வெளியேறினார். ஆனால், சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் களத்துக்கு வந்த வார்னர், சிறப்பாக ஆடிய 157 ரன்கள் குவித்து தனது வேதனைக்கு ஆறுதல் தேடிக்கொண்டார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் சிக்கினார்கள். இருவருக்கும் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தடைவிதிக்கப்பட்டது. இருவரும் மக்களிடம் வந்து பொதுமன்னிப்பு கேட்டு கண்ணீர்விட்டனர். கடந்த சில மாதங்களாக இருவரும் மீண்டும் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சிட்னி நகரில்  ரான்ட்விக், பீட்டர்ஷாம் கிளப்புகள் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் ரான்ட்விக் அணியில் டேவிட் வார்னர் இணைந்து விளையாடினார். டேவிட் வார்னர் 35 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார். அப்போது பில் ஹக்ஸின் சகோதரர் ஜேஸன் ஹக்ஸ் பீல்டிங் செய்த போது, பேட்டிங்கில் இருந்த வார்னரைப் பார்த்து ஏதோ கடுமையான வார்த்தைகளால் பேசியுள்ளார். இதனால், மனவேதனை அடைந்த வார்னர், தொடர்ந்து பேட் செய்யமுடியாமல் பாதியிலேயே பெவிலியன் திரும்பினார். இதனால், மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. சகவீரர்கள் சென்று வார்னரை சமாதானப்படுத்தினார்கள். ஆனால், மிகுந்த வேதனையில் இருந்த இருந்த வார்னர் சிறிது நேரத்துக்குப்பின் மீண்டும் விளையாட முடிவு செய்து களத்தில் இறங்கி 157 ரன்கள் விளாசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து