முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

3 லட்ச விளக்கு ஒளியில் பிரகாசிக்கும் அயோத்தி தீபாவளியன்று கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி

திங்கட்கிழமை, 29 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,அயோத்தியில் சுமார் மூன்று லட்சம் விளக்கேற்றி வைத்து மற்றொரு கின்னஸ் சாதனை நிகழ்த்த உ.பி. அரசு முயற்சி செய்து வருகிறது.கடந்த வருடம் 2017-ம் ஆண்டு வந்த தீபாவளியில் அயோத்தியின் தீப ஒளியை கின்னஸ் சாதனையாக்க முயற்சிக்கப்பட்டது. இதற்காக, அப்போது மொத்தம் 1.71 லட்சம் தீப விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டன. இந்த முயற்சி இந்த வருடமும் தொடர உள்ளது.

நவம்பர் 6-ம் தேதி வரவிருக்கும் இந்த வருடத் தீபாவளி ராமர் பிறந்த இடமாகக் கருதப்படும் அயோத்தியில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. இதன் சரயூ நதிக்கரையில் கடந்த வருடத்தைப் போல் இந்தமுறையும் தீப உற்சவம் விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது.இதன் மூன்று நாள் உற்சவத்தில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ராம்நாயக் மற்றும் உ.பி. அமைச்சர்கள் பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன் சிறப்பு விருந்தினராக தென் கொரியாவின் முதல் பெண்மணியும், அந்நாட்டு அதிபர் மூன் ஜொய் இன்னின் மனவியுமான கிம் ஜங் சூக் கலந்து கொள்கிறார்.

இந்த கின்னஸ் சாதனைக்காக பைஸாபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் பகுதிகளில் விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக, அயோத்திக்கு சுமார் ஐந்தாயிரம் ராம பக்தர்கள் வந்திருந்து இத்தொண்டில் ஈடுபட உள்ளனர். இவற்றைக் கண்காணிக்க கின்னஸ் அலுவலக அதிகாரிகளும் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.தீப உற்சவத்தன்று ஏற்றப்படும் முதல் தீபத்திற்காக 16 அடி அகலம் கொண்ட பிரம்மாண்டமான விளக்கு தயாரிக்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் அயோத்தியில் ஒருநாள் மட்டும் விமரிசையாகக் கொண்டாடப்பட்ட தீபாவளி இந்த வருடம் தீப உற்சவ நாளான நவம்பர் 4 முதல் மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ராவணனைக் கொன்ற ராமர் இந்த தீபாவளி நாளில் சீதை மற்றும் தம்பி லட்சுமணனுடன் அயோத்தி திரும்பியதை நினைவுகூரும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக ஒரு ஹெலிகாப்டரை பறக்கும் ரதமாகச் சித்தரித்து அதில் வந்து இறங்கும் வேடமணிந்த மூவரையும் முதல்வர் யோகி வரவேற்க உள்ளார்.இந்த மூன்று நாட்களும் அயோத்தியின் அனைத்து கோயில்களும், மடங்களும் ஒளிவெள்ளத்தில் பிரகாசிக்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதன் முதல் நடைபெறும் ராமர், சீதா வேடமணியும் போட்டியில் முதல் பரிசான ரூ.51,000 ரொக்கம் அளிக்கப்பட உள்ளது. இரண்டாம் நாளில் பிரம்மாண்டமான கோலங்கள் போட்டியும் நிகழ்த்தப்பட உள்ளது.மூன்று நாட்களின் முக்கிய நிகழ்ச்சி நவம்பர் 6-ல் நடைபெறுகிறது. இதில், பைஸாபாத்தின் சாக்கேத் கலைக்கல்லுரி முதல் சரயூ நதிவரை ஊர்வலம் நடைபெறுகிறது. இதன் கலைநிகழ்ச்சிகளில் கொரியா, ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகளின் கலைஞர்களும் கலந்துகொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து