முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரபேல் விவகாரம்: புதிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

செவ்வாய்க்கிழமை, 30 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : ரபேல் ஒப்பந்த விவகாரம் குறித்த புதிய மனுவை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனு சுப்ரீம் கோர்ட்  தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது.

அப்போது, இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே பல மனுக்கள் விசாரணையில் உள்ளன. இந்நிலையில் புதிய மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று கூறி அந்த மனுவை விசாரிக்க மறுத்தனர்.

பிரான்ஸ் நாட்டிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பல்வேறு மனுக்கள்சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.

அதில் வழக்கறிஞர் எம்.எல். சர்மா தாக்கல் செய்திருந்த பொது நல மனு கடந்த 10-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.எல். சர்மா வாதிடுகையில், ஒவ்வொரு கட்டத்திலும் ரபேல் விமானங்களுக்கு வெவ்வேறு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தியா அதிக பணம் கொடுத்து ரபேல் விமானங்களை வாங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 2008-ஆம் ஆண்டில் அந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்து இதுவரை உள்ள தகவல்கள் மற்றும் ஒப்பந்தம் கையொப்பமிடுவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஒப்பந்தத்தில் இணைந்த ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை குறித்து நீதிபதிகளிடம் கூறினார்.

அதை கேட்ட நீதிபதிகள், அந்த ஒப்பந்தம் தொடர்பான தகவல்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதையடுத்து, அந்த ஒப்பந்தம் குறித்து எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான தகவல்களை மூடி முத்திரையிட்ட உறையில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சமர்ப்பித்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து