முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. ஆட்சியில்தான் நோய் பாதிப்புகள் அதிகம்: தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் தற்போது நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயகுமார் பதிலடி

சனிக்கிழமை, 3 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, தி.மு.க. ஆட்சியின்போதுதான் நோய் பாதிப்புகள் அதிகம் இருந்ததாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன என்று புள்ளி விவரங்களோடு அமைச்சர் ஜெயகுமார், ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அத்தனை நோய்களும்... தி.மு.க. தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மருத்துவ அவசர நிலை பிறப்பிக்கப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் வரலாறு காணாத என்னென்ன நோய்கள் இருக்குமோ அத்தனை நோய்களும் வந்தது. ஏதோ வானத்தில் இருந்து குதித்தது போல் நாம் சொல்வதையெல்லாம் மக்கள் கேட்பார்கள். கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்பது போல் ஸ்டாலின் பேசியிருக்கிறார். தி.மு.க. ஆட்சியில் 1996- 2001-ம் ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது காலரா, நிமோனியா, காய்ச்சல் டெங்கு என்னென்ன நோய்கள் உண்டோ அத்தனை நோய்களும் தமிழ்நாட்டில் வந்தது.

மேயராக இருந்தபோது...மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த சென்னையில் 1996-200-ம் ஆண்டுகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மட்டும் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 28 ஆயிரத்து 387 பேர். 2006 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் தி.மு.க. மேயராக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 74 ஆயிரத்து 89 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் 1234 பேர். 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு தான். அப்போது வயிற்றுப்போக்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 ஆயிரத்து 780. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 5 ஆயிரத்து 26 பேர் தான். மொத்தமாக 14 ஆயிரத்து 218 பேர் தான் நோய்களால் பாதிக்கப்பட்டார்கள்.

முன்கூட்டியே நடவடிக்கை ....ஆனால் தி.மு.க. ஆட்சியில் காலரா, வைரஸ்,. டெங்கு போன்ற நோய்களால் ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 166 பேர் பாதிக்கப்பட்டார்கள். 100 சதவீதம் நோய்கள் தி.மு.க. ஆட்சியில்தான் இருந்தது. இப்போது காய்ச்சல் வருவது அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் வயிற்றுப்போக்கால் 15 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில் 68 மாதங்களில் வயிற்றுப்போக்கால் 23 ஆயிரத்து 835 பேர் பாதிக்கப்பட்டார்கள்.  52 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் காய்ச்சல் வருவதறிந்து முன்கூட்டியே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அடிப்படைவசதிகள்... தி.மு.க. ஆட்சியில் நோய்களின் எண்ணிக்கை நூறு சதவீதம் என்றால் இப்போது வெறும் 15 சதவீதம் தான். அதையும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்றியிருக்கிறோம். மருத்துவமனைகளில் அடிப்படைவசதிகள் செய்யப்பட்டுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. காய்ச்சல், காலரா, டெங்கு போன்ற நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை. அச்சமடைய தேவையில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து