இந்தியா - மே.இந்திய தீவு டி.20 போட்டி சென்னையில் டிக்கெட் விற்பனை துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 4 நவம்பர் 2018      விளையாட்டு
indiya 04-11-2018

சென்னை, இந்தியா - மேற்கு இந்திய தீவுகளுக்கிடையேயான மூன்றாவது இறுதி டி.20 போட்டி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடப்பதால் அதற்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 எனவும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை 3-1என்ற கணக்கிலும் இந்திய அணி வென்றது.இந்நிலையில் இரு அணிகளும் மூன்று டி 20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் மோத உள்ளன. இதன் முதல் ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. விராட் கோலி, தோனி ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரோகித் சர்மா தலைமையில் டி 20 தொடரை சந்திக்கிறது இந்தியஅணி.சர்வதேச டி 20 ஆட்டங்களில் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளதாக கருதப்படும் சூழ்நிலையில் அதிலும் சொந்த மண்ணில் அவர், இல்லாமல் இந்திய அணி களமிறங்க உள்ளது. டி 20ஆட்டங்களில் உலகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு தொழில்முறை போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாடிய அனுபவத்தை கொண்டவர்கள் என்பதால் இந்திய அணிக்கு எதிரான தொடரில் அந்த அணி கடும் சவால் அளிக்கக்கூடும் என கருதப்படுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டி கொல்கொத்தாவில் நேற்று நடைபெற்ற நிலையில் இரண்டாவது போட்டி லக்னோவிலும் மூன்றாவது போட்டி சென்னையிலும் நடக்கிறது.இந்தியா - மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் மூன்றாவது டி.20 போட்டி வரும் 11-ம் சென்னையில் நடக்கிறது. இதற்கான டிக்கெட் விற்பனை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த இரு அணிகளும் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி என்பதால்விறுவிறுப்பாக போட்டி இருக்கும் என்பதால் டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் ஆர்வத்துடன் குவிந்தனர்.டிக்கெட்டுகள் விற்பனை நேற்று காலை தொடங்கியது. குறைந்தபட்ச விலை ரூ.1200 தொடங்கி அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்கப்படுகிறது. இதற்கு முன்னர் சர்வதேச போட்டிகள் எதுவும் சமீபத்தில் சென்னையில் நடக்காத நிலையில் ரசிகர்கள் ஆர்வம் காட்டினாலும் விராட் கோலி, தோனி ஆகியோர் இப்போட்டியில் விளையாடாததால் ஆர்வம் குறைவாக காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை பயமுறுத்தல் காரணமாக போட்டி அன்று மழை இருக்கலாம் என்பதால் டிக்கெட் விற்பனை சற்று குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து