ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா

திங்கட்கிழமை, 5 நவம்பர் 2018      உலகம்
usa2018-08-25

வாஷிங்டன்,இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதார தடைகளை ஈரான் மீது அமெரிக்கா விதிக்கவுள்ளது.

எதிராக பேரணி... ஈரான் மீதும் அதனுடன் வர்த்தகம் செய்யும் அரசுகள் மீதும், 2015 அணு ஆயுத ஒப்பந்தம்படி நீக்கப்பட்ட தடைகளை டிரம்பின் நிர்வாகம் மீண்டும் விதிக்கவுள்ளது. இது எண்ணெய் ஏற்றுமதி, வர்த்தக போக்குவரத்து, வணிகம் என அனைத்து விதத்திலும் பொருளாதாரத்தை பாதிக்கும். நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான ஈரான் மக்கள் பலர் இதற்கு எதிராக பேரணி ஒன்றை நடத்தினர்.

கடும் தடைகள்...தங்கள் நாட்டின் பாதுகாப்பு வலிமையை காட்ட திங்களன்றும், செவ்வாயன்றும் விமானஅணிவகுப்புகளை நடத்தப்போவதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்க இடைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதற்கு முன்னர் பேசிய டிரம்ப், "ஈரான் மீது விதிக்கப்படும் தடைகள் மிகவும் கடுமையானது. இதுதான் இதுவரை விதித்ததிலேயே கடுமையான தடைகள். இதற்கு பிறகு என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்" என தெரிவித்தார். அமெரிக்கா இதுவரை இல்லாத அளவு கடுமையான தடைகளை ஈரான் மீது நேற்று விதிக்கவுள்ளது.

விதிவிலக்கு...ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளான இந்தியா, சீனா, தென் கொரியா துருக்கி என தங்களின் கூட்டனி நாடுகளை டிரம்ப் நிர்வாகம் தடையிலிருந்து விலக்கியுள்ளது.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து