பலத்த காற்று எதிரொலி: ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

வியாழக்கிழமை, 8 நவம்பர் 2018      ராமநாதபுரம்
8 rms news

 ராமேசுவரம்,   கடல் சீற்றம் மற்றும் பலத்த காற்று எதிரொலியாக மீனவர்கள் கடலுக்கு செல்ல ராமேசுவரம் மீன்வளத்துறை அதிகாரிகள் இரண்டாவது           நாளாக        நேற்று அனுமதி மறுத்துள்ளது.
  ராமேசுவரம்     , பாம்பன் ஆகிய பகுதிகளிலிருந்து 850-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3.500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழில்           ஈடுபட்டு     வருகின்றனர். இவர்கள்           வழக்கம்போல் மீன்பிடிக்க செல்வதற்காக                மீன்வளத்துறையினரிடம் அனுமதிச்சீட்டு கேட்டனர். ஆனால்        வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த   தாழ்வு நிலை      உருவாகி இருப்பதால் பாக்ஜலசந்தி        ஆழ்கடல் பகுதியில் இரண்டாவது நாளாகவும்            நேற்றும்       கடல் சீற்றம் அதிகம் உள்ளதாகவும், காற்றின் வேகம்       அதிகமாக       உள்ளதாகவும்               மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல        தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல்       இரண்டாவது                                     நாளாக                      நேற்று ஏமாற்றம் அடைந்தனர். மேலும்       மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கடலில் நங்கூரமிட்டு       நிறுத்தி பாதுகாத்து   வருகின்றனர்.

2019 தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து