தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் இல்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

வெள்ளிக்கிழமை, 9 நவம்பர் 2018      தமிழகம்
vijayabaskar 2018 11 09

சென்னை, விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டும் பணிகள் தொடங்கப்படும் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

துரிதப்படுத்தப்படும்

சென்னையில் நிருபர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டு இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதற்கான பணிகள் துரிதப்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

அடிக்கல் பணிகள்...

எனவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதில் காலதாமதம் ஏற்படாது. எம்ய்ஸ் மருத்துவமனை அமைவதில் எந்தவித மாற்றமும் இல்லை. மேலும், விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்.

 இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து