முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகத்தில் இன்று திப்பு ஜெயந்தி எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. பந்த்

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூர்,கர்நாடகாவில் காங்கிரஸ், ம.ஜ.த கூட்டணி அரசு சார்பில் திப்பு ஜெயந்தி விழா இன்று ஞாயிற்றுக் கிழமை கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், கர்நாடகத்தின் பல பகுதிகளில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தி வருகிறது. மேலும் சில அமைப்புகளும் இணைந்து முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. மடிகேரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது பா.ஜ.க-வினர் கைது செய்யப்பட்டனர். மேலும் பல பகுதிகளில் அதிகளவிலான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முஸ்லிம்களின் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு தான் திப்பு ஜெயந்தி கொண்டாடப்படுவதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியுள்ளது.

அதுமட்டுமல்லாமல் திப்பு ஜெயந்திக்கு பதிலாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவு விழா கொண்டாட வேண்டும் எனவும் கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.இதனிடையே, கர்நாடக முதல்வர் குமாரசாமி, உடல் நிலை காரணமாக இன்று 11-ம் தேதி வரை மருத்துவர்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளதால் இதில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று துணை முதல்வர் பரமேஸ்வராவும் இவ்விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து