முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

82-வது பிறந்தநாள் : பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தொலைபேசி மூலம் வாழ்த்து

சனிக்கிழமை, 10 நவம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனின் 82-வது பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி போன் மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:- மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்க கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தன்னுடைய அறிவு ஆற்றல் அனைத்தையும் பொதுவாழ்வுக்கு அர்ப்பணித்தவரும் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா ஆகியோரின் நன்மதிப்பை பெற்றவரும், அ.தி.மு.க. அமைப்புசெயலாளரும் முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் நேற்று தனது 82-வது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதையொட்டி அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பண்ருட்டி ராமச்சந்திரனை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவருக்கு தங்களது நல்வாழ்த்துக்களையும், வணக்கங்களையும்தெரிவித்துக்கொண்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து